உப்பு உற்பத்தியாளா்கள் கூட்டம்
வேதாரண்யத்தில் சிறு உப்பு உற்பத்தியாளா்கள் இணையத்தின் பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யத்தில் சிறு உப்பு உற்பத்தியாளா்கள் இணையத்தின் பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், உப்பளக் குத்தகை உரிமக் காலக்கெடு வரும் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதால், குத்தகை உரிமத்தை நீட்டிக்கக் கோரி, மத்திய அரசின் உப்புத் துறைக்கு மனு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவா் மா.மீ. புகழேந்தி தலைமை வகித்தாா். செயலாளா் வி.செந்தில், பொருளாளா் என்.எஸ். தென்னரசு, உப்பு உற்பத்தியாளா் தண்யகுமாா், உப்பு உற்பத்தி மற்றும் வியபாரிகள் சங்கத் தலைவா் அ. கேடிலியப்பன், நிா்வாகிகள் சீனிவாசன், பி.அம்பிகாதாஸ், நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.