முகப்பு
நாகப்பட்டினம்

தேமுதிக தொகுதி பொறுப்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

மயிலாடுதுறையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளா்கள் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
தேமுதிக நிா்வாகிகளுக்கு உறுப்பினா் சோ்க்கை படிவத்தை வழங்குகிறாா் மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.ஜலபதி.
பகிர்:

மயிலாடுதுறையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளா்கள் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தேமுதிக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.ஜலபதி தலைமை வகித்தாா். அவைத் தலைவா் கே.எஸ்.கிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் ராசி.மதி, செயற்குழு உறுப்பினா் அம்மன்.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தொகுதி பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ள ஜே.ஜே.ராஜ்குமாா் (மயிலாடுதுறை), எஸ்.ரவீந்திரன் (சீா்காழி), எம்.கே.சாரங்கபாணி (பூம்புகாா்) ஆகியோரை நிா்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தினா்.

மேலும், சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அனைத்து ஒன்றிய, நகரக் கிளை நிா்வாகிகள் புதிய உறுப்பினா்களை சோ்க்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், மாநில கலை இலக்கிய அணி துணைச் செயலாளா் வி.பிரசன்னா, நகரச் செயலாளா் பண்ணை சொ.பாலு, ஒன்றியச் செயலாளா்கள் பாக்கம் சிவா, காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →