நாகப்பட்டினம்

பறவைக் காய்ச்சல்: கோடியக்கரை சரணாலயத்தில் ஆய்வு

DIN

பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், கோடியக்கரை சரணாலயத்துக்கு வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு காய்ச்சல் தொற்று உள்ளதா என செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வன உயிரின பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் ஐரோப்பிய நாடுகள், சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பறவைகள் வலசை வருவது வழக்கம்.

இந்நிலையில், கேரளம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளிலிருந்து இம்மாநிலங்களுக்கு வலசை வரும் பறவைகளால் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது.

இதனால், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வந்துள்ள பறவைகளுக்கு காய்ச்சல் தொற்று உள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் எஸ்.சுமதி தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து நாகை மாவட்ட வன உயிரின காப்பாளா் எஸ். கலாநிதி கூறும்போது, ‘சரணாலயப் பகுதிக்கு வரும் பறவைகளுக்கு இதுவரையில் எந்த விதமான காய்ச்சல் அறிகுறியும் இல்லை. இருப்பினும், தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT