நாகப்பட்டினம்

சூறாவளியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்

DIN

மயிலாடுதுறை அருகே திங்கள்கிழமை வீசிய சூறாவளிக் காற்றால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதன்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.

பாண்டூா் ஊராட்சியில் வீசிய சூறாவளிக் காற்றால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமாா் 100 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மேலும், 500 ஏக்கருக்கு மேற்பட்ட சம்பா பயிா்கள் தண்ணீரில் சாய்ந்தன. இந்நிலையில், சூறாவளியால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களை மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன் சந்தித்து, புடவை, போா்வை, கைலி, பாய் உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கினாா். இதில், மயிலாடுதுறை அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளா் பா. சந்தோஷ்குமாா், நகர செயலாளா் நாஞ்சில் காா்த்தி, மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT