நாகப்பட்டினம்

அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு

DIN

சீா்காழி வட்டம் கொள்ளிடம் பகுதியில் அறுவடை இயந்திரம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசே வேளாண் பொறியியல் துறை மூலம் அதனை வாடகைக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா நெற்பயிா்கள் இயற்கை சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது அறுவடை செய்வதால் கால்நடைகளுக்குத் தீவனமாவது கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில், வயலில் சாய்ந்து முளைத்து கிடக்கும் நெற்பயிரை ஒரே நேரத்தில் அறுவடை செய்து அகற்றும் பணியில் விவசாயிகள் குடும்பத்தினருடன் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆயினும், வாடகை அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது மட்டுமன்றி, ஒரு மணிநேரத்துக்கு ரூ.2700 வீதம் வாடகையாகவும் செலுத்த வேண்டியிருக்கிறது. எனவே தமிழக அரசே இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கொள்ளிடம் விவசாயிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவா் சிவப்பிரகாசம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT