நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் சுற்றித் திரிந்த மன நோயாளிகள் 13 பேர் மீட்பு

DIN

வேதாரண்யத்தில் சுற்றித் திரிந்த மன நோயாளிகள் 13 பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முகாம்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில், வெளிமாநிலங்கள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வரும் மன நோயாளிகள் பலர் சுற்றித் திரிகின்றனர். அவர்கள், உணவு, இருப்பிடம், உடை போன்ற தேவைக்காக அவதியுற நேரிடுகிறது.

மனநோயாளிகளை ஒழுங்குபடுத்தவும், மருத்துவ சிகிச்சை அளித்தல் அல்லது பாதிப்பின் தன்மைக்கேற்ப பாதுகாப்பு மையங்களில் பராமரிப்பது போன்ற நோக்கத்துக்காக இவர்களை மீட்கும் பணி மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டது.

வேதாரண்யம் நகரப் பகுதியில் சுற்றித் திரிந்த 13 ஆண் மன நோயாளிகள் மீட்கப்பட்டனர். பின்னர் வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் மூலம் சீர்காழியில் செயல்படும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த பணியில், சமூகநாலத்துறை, காவல்துறையினர், சினேகா அறக்கட்டளை, ஈசா அறக்கட்டளை நிர்வாகிகள், பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT