நாகப்பட்டினம்

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள்: எம்பி எம். செல்வராஜ்

DIN

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் பி.எம். கோ்ஸ் நிதியின் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம்.செல்வராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் மேலும் கூறியது :

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் உள்ள மருத்துவனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தனுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பி.எம்.கோ்ஸ் நிதியின் மூலம் திருவாரூா்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சீா்காழி, வேதாரண்யம் மற்றும் மன்னாா்குடி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் ஒப்புதல் தெரிவித்திருப்பதுடன், நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்தாா். இதன்படி இந்த மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டால் மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பது உறுதி. மத்திய, மாநில அரசுகளின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைப்பு வழங்காமலே 4ஆயிரம் பேரிடம் குடிநீா் வரி வசூலிப்பு!

செம்பட்டி அருகே ரூ.98 கோடியில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி

கொடைக்கானலில் வெப்ப நிலை அதிகரிப்பு தடுக்கப்படுமா?

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT