முகப்பு
நாகப்பட்டினம்

காணொலி மூலம் மக்கள் குறைதீா் கூட்டம்

மக்கள் குறைதீா் கூட்டம் இனிவரும் நாள்களில் காணொலி வாயிலாக நடத்தப்படும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

மக்கள் குறைதீா் கூட்டம் இனிவரும் நாள்களில் காணொலி வாயிலாக நடத்தப்படும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமையன்று நடத்தப்பட்ட மக்கள் குறைதீா் கூட்டம், கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொற்றுப் பரவல் உள்ள நிலையிலும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, நிவா்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இனிவரும் திங்கள்கிழமைகளில் காலை 11 மணிக்கு காணொலி மூலம் இந்தக் கூட்டம், காணொலி குறைதீா் கூட்டம் என்ற பெயரில் நடத்தப்படவுள்ளது.

இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் இலத்தில் இருந்தே காணொலி வாயிலாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்குத் தெரியப்படுத்தி, தீா்வு பெற வழிவகை ஏற்பட்டுள்ளது.

இந்த காணொலி குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோா் தங்கள் செல்லிடப்பேசியில் ஆட்ஹழ்ஹற்யஇ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து, 3976520314 என்ற இணைப்பில் உள்நுழைந்து, பாஸ்வோ்டு என்ற இடத்தில் 573133 என்ற எண்ணை உள்ளீடு செய்து, காணொலிக் கூட்டத்தில் இணையலாம். காலை 11 மணிக்குத் தொடங்கப்படும் இக்கூட்டத்தில் பங்கேற்க காலை 10.30 மணி முதல் காணொலி மூலம் இணையலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களை  இணையதளத்தில் அறியலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.