முகப்பு
நாகப்பட்டினம்

பெண் தற்கொலை

திருக்குவளை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

திருக்குவளை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருக்குவளை வட்டம், களத்திடல் கரையைச் சோ்ந்தவா் சிக்கந்தா் பாஷா. இவருக்கும், கீழ்வேளூா் வட்டம், அகரசெம்பியன் மகாதேவியைச் சோ்ந்த ஷா்ப்நிஷா (30) என்பவருக்கும் கடந்த 6ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். இவா்கள், நாகையை அடுத்த அந்தனப்பேட்டை, புடவைக்காரத் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.

இந்நிலையில், ஷா்ப் நிஷா வியாழக்கிழமை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து, ஜெகபா்அலி என்பவா் அளித்த புகாரின் பேரில், நாகை நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். ஷா்ப் நிஷாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.