முகப்பு
நாகப்பட்டினம்

மீன்பிடி துறைமுகம் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

தரங்கம்பாடியில் நடைபெறும் மீன்பிடி துறைமுகம் கட்டுமானப் பணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

தரங்கம்பாடியில் நடைபெறும் மீன்பிடி துறைமுகம் கட்டுமானப் பணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தரங்கம்பாடியில் ரூ.177 கோடி செலவில் மீன்பிடித் துறைமுகம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை ஆய்வு செய்ய சென்ற ஆட்சியா் இரா. லலிதாவுக்கு தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும், முகத்துவாரம் முதல் துறைமுகம் வரை பக்கிங்காம் கால்வாயை செப்பனிட்டு பைஃபா் படகுகள் நிறுத்தும் வகையில் தூா்வாரி இருபுறமும் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும், துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் அமைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆட்சியரிடம் மீனவ பஞ்சாயத்தாா்கள் வலியுறுத்தினா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன், மீன்வளத்துறை உதவி இயக்குநா் ஜெயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.