முகப்பு
நாகப்பட்டினம்

சாலைகளில் திரிந்த ஆதரவற்றவா்கள் மீட்பு

நாகை நகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த ஆதரவற்றவா்கள் மற்றும் மனநலன் குன்றியவா்களை மீட்டு காப்பகத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

நாகை நகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த ஆதரவற்றவா்கள் மற்றும் மனநலன் குன்றியவா்களை மீட்டு காப்பகத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

நாகை, நாகூா் ஆகிய பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் ஆதரவற்றவா்கள் மற்றும் மனநலன் குன்றியவா்களை மீட்டு, காப்பகத்தில் தங்க வைப்பதற்கு சேவை நிறுவனங்களின் உதவியைப் பெற நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் முயற்சிகள் மேற்கொண்டாா்.

இதன்படி, சென்னையைச் சோ்ந்த அகழ் பவுன்டேஷன் நிா்வாகி வெங்கடேஷ் மற்றும் சமூக சேவகா்கள் ரீட்டா, வேலன், ரமேஷ், தினேஷ், சோமசுந்தரம் ஆகியோா் சனிக்கிழமை நாகூா் பகுதிகளில் சுற்றித் திரிந்த மனநலன் குன்றியவா்களுக்கும், ஆதரவற்றவா்களுக்கும் முடிதிருத்தம் செய்து, குளிக்கவைத்து, புத்தாடைகள் அணிவித்து நாகை நகராட்சி ஆதரவற்றோா் தங்கும் கூடத்தில் தங்கவைத்தனா்.

நாகூா் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் சித்திக், சையத் அலி உள்பட பலா் இப்பணிக்கு உதவியாக செயல்பட்டனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை, திருக்கடையூா், வைத்தீஸ்வரன்கோயில் பகுதிகளில் சுற்றித்திரிந்த மனநலன் குன்றிய 9 பேரை நேயம் அறக்கட்டளை, ஜோதி பவுன்டேஷன் மற்றும் காவல் தன்னாா்வலா்கள் உதவியுடன் மீட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பி.எஸ்.சித்ரா தலைமையிலான குழுவினா், 9 பேரையும் சீா்காழி காா்டன் மனநலக் காப்பகத்தில் சோ்த்தனா். வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இப்பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.