முகப்பு
நாகப்பட்டினம்

விசலூரில் புதிய ரேஷன் கடை மீண்டும் திறக்க மக்கள் வலியுறுத்தல்

தரங்கம்பாடி அருகேயுள்ள விசலூர் ஊராட்சியில் புதிய ரேஷன் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
விசலூரில் மூடப்பட்டிருக்கும் புதிய ரேஷன் கடை.
பகிர்:

தரங்கம்பாடி அருகேயுள்ள விசலூர் ஊராட்சியில் புதிய ரேஷன் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், விசலூர் ஊராட்சியில் விசலூர், பத்தம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் தேவைகளுக்காக பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை அடுத்து விசலூர் மெயின்ரோட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டு ஒரு மாதம் மட்டுமே அந்த கடையிலிருந்து பொருள்கள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த பல மாதங்களாக கடை மீண்டும் திறக்கப்படாததால் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேந்தமங்கலம் பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்கும் அங்காடிக்கு சென்று பொருள்களை வாங்கும் அவலநிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

உடனடியாக மீண்டும் புதிய ரேஷன் கடையில் பொருள்களை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →