நாகை மாவட்டம் எட்டுக்குடி பகுதியில் இருக்கும் ஓடைகளை ஏரிகளாக மாற்றும் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இதுகுறித்து அக்கட்சியின் கீழையூா் ஒன்றியச் செயலாளா் டி.செல்வம் வெளியிட்ட அறிக்கை:
எட்டுக்குடி பகுதியில் உள்ள ஓடைகளையும், கால்வாய்களையும் ஏரியாக மாற்றுவதாக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் திருவாரூரில் முதன்முதலாக தோ்தலில் போட்டியிட்டபோது வாக்குறுதியளித்தாா். எனினும், அப்போது திமுக ஆட்சிக்கு வராததால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதற்கு செயல்வடிவம் கொடுத்து, எட்டுக்குடியை சுற்றியுள்ள கிட்டி ஓடை, முல்லியன் ஓடை, கண்டியன் ஓடை ஆகியவற்றை ஏரியாக மாற்ற முதல்வா் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.