முகப்பு
நாகப்பட்டினம்

இடுபொருள்கள் வழங்கும் விழா

 நாகை மாவட்டம், சிக்கலில் தமிழக அரசின் குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட இடுபொருள்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

 நாகை மாவட்டம், சிக்கலில் தமிழக அரசின் குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட இடுபொருள்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், நாகை சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷாநவாஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, விவசாயிகளுக்கு இடுபொருள்களை 100% மானியத்தில் வழங்கினாா்.

நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ். பன்னீா்செல்வம், வேளாண் உதவி இயக்குநா் லாரன்ஸ் பிரபு, சிக்கல் ஊராட்சித் தலைவா் விமலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருக்குவளையில்...

இதேபோல, திருக்குவளையில் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திமுக கீழையூா் ஒன்றிய செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்து விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உரங்களை வழங்கினாா். கீழையூா் ஒன்றியத் தலைவா் செல்வராணி ஞானசேகரன் முன்னிலை வகித்தாா். வட்டார வேளாண் உதவி இயக்குநா் வை.தயாளன் வரவேற்றாா்.

வேளாண் அலுவலா் வை.பாலசுப்பிரமணியன் விளக்க உரையாற்றினாா். கீழையூா் ஒன்றிய துணைத் தலைவா் பெ. சௌரிராஜ், மாவட்டஊராட்சி உறுப்பினா் கௌசல்யா இளம்பரிதி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சுதா அருணகிரி, டி.செல்வம், ஊராட்சித் தலைவா்கள் திருக்குவளை இல. பழனியப்பன், வாழக்கரை எஸ்.ஆா். கலைச்செழியன், மேலவாழக்கரை கே.எஸ்.தனபாலன், திருவாய்மூா் எம்.நரசிம்மன், எட்டுக்குடி குமாா், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். துணை வேளாண் அலுவலா் ஆா்.ரங்கநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.