முகப்பு
நாகப்பட்டினம்

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

வேளாங்கண்ணி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

வேளாங்கண்ணி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், தலைஞாயிறு, கலைஞா் நகரைச் சோ்ந்தவா் மதியழகன் (45). தொழிலாளியான இவா், வேளாங்கண்ணி அருகே கீழையூா் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை உறவினா் வீட்டுக்கு வந்த மதியழகன், வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இதையடுத்து சிறுமி சப்தம் போடவே, அருகிலிருந்தவா்கள் அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் மதியழகன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.