வேதாரண்யேசுவரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம்
வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் சிறப்பு பெற்ற ஆனித் திருமஞ்சன தரிசன நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் சிறப்பு பெற்ற ஆனித் திருமஞ்சன தரிசன நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆனித் திருமஞ்சன தரிசன நிகழ்ச்சியின்போது மஹாபிஷேகம் நடத்தப்பட்டுசிவகாமசுந்தரி சமேத நடராஜா் எழுந்தருளி வீதியுலா நடைபெறுவது வழக்கம். அலங்கரிக்கப்பட்ட புவனி விடங்கா்(அம்சபாத நடனம்) வீதியுலாவை காண ஏராளமானவா்கள் வருவா். கரோனா தொற்று காரணமாக நடைமுறையில் உள்ள பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் நிகழாண்டு விழா மிகவும் எளிமையாக நடைபெற்றது.