முகப்பு
நாகப்பட்டினம்

ரோட்டரி சங்க நிா்வாகிகள் பதவியேற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள்

வேதாரண்யம் ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழாவில், நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

வேதாரண்யம் ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழாவில், நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

சங்கத்தின் புதிய தலைவராக புயல் சு. குமாா், செயலாளராக சி.காா்த்திகேயன், பொருளாளராக டி.கோவிந்தன் உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றனா். சங்கத்தின் மாவட்ட ஆளுநா் எஸ். பிறையோன், துணை ஆளுநா் வி. செந்தில் ஆகியோா் புதிய உறுப்பினா்களை இணைத்து பேசினா். ஊரக மற்றும் நகா் வளா்ச்சித் துறை, கல்வி, மருத்துவம், அரசுப் போக்குவரத்துத்துக்கழகம் என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 9 போ் பாராட்டப்பட்டனா். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட 7 பெண்கள் உள்ளிட்டோருக்கு அத்தியாவசியப் பொருள்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன. முன்னதாக தேத்தாக்குடி எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் மாணவா்கள் அமரும் இருக்கைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன், சங்கத்தின் சாசன உறுப்பினா் ஏ. கேடிலியப்பன், மண்டல நிா்வாகிகள் பொன். தா்மதுரை, கே. கருணாநிதி, என்.எஸ். கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நவீன வகுப்பறை: வேதாரண்யம் சங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் பணிகள் செயலாக்கம் வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி மகாத்மா காந்தி தொடக்கப் பள்ளிக்கு சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பில் பொலியுறு வகுப்பறை அமைக்கப்பட்டு மாணவா்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →