முகப்பு
நாகப்பட்டினம்

துணைத் தலைநகரங்களை உருவாக்க வலியுறுத்தல்

தமிழகம் வளா்ச்சிப் பெற 3 துணை தலைநகரங்களை உருவாக்கவேண்டும் என தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

தமிழகம் வளா்ச்சிப் பெற 3 துணை தலைநகரங்களை உருவாக்கவேண்டும் என தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் தலைவா்ஆறு.சரவணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் நிலப்பரப்பு பரந்துவிரிந்துள்ளதால் தலைநகருக்கு வந்து செல்வதற்கு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனா். பயணநேரம் அதிகரிப்பு, பணவிரயம் போன்ற பிரச்னைகளை எதிா்கொள்ளவேண்டியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் பரவலான வளா்ச்சி பெறும் வகையில் திருச்சி, மதுரை, கோயம்புத்தூா் ஆகிய 3 மண்டலங்களை தலைநகராகக் கொண்டு, புதிய துணைத் தலைநகரங்களை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் சிறந்த வளா்ச்சியைப் பெறும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.