நாகப்பட்டினம்

கரோனா: மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளில் தடுப்பூசி

DIN

திருக்குவளை அருகே திருவாசல் பகுதியில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று சனிக்கிழமை அவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருவாய்மூா் ஊராட்சி திருவாசலில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஊராட்சித் தலைவா் என். நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலா் டி.செல்வம் முன்னிலை வகித்தாா். திருப்பூண்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் வட்டார மருத்துவ அலுவலா் அரவிந்த்குமாா் தலைமையில் மருத்துக் குழுவினா் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

முன்னதாக, முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவக் குழுவினா் அவா்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பு செலுத்தினா். இப்பணியினை கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.ராஜ்குமாா் ஆய்வு செய்தாா். முகாமில் 298 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT