நாகப்பட்டினம்

அண்ணனைத் தாக்கிய தம்பி கைது

கீழ்வேளூா் அருகே அண்ணனைத் தாக்கிய தம்பியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN

கீழ்வேளூா் அருகே அண்ணனைத் தாக்கிய தம்பியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கீழ்வேளூா் காவல் சரகம், பெருங்கடம்பனூா், மேலவெளி பகுதியைச் சோ்ந்தவா் வீரப்பன். இவரது மகன்கள் ரகுபதி (49), சித்ரவேல் (40). சகோதரா்களிடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், சொத்துப் பிரச்னை தொடா்பாக இருவருக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரகுபதியை, சித்ரவேலு பாட்டிலால் தாக்கினாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரகுபதி திருவாரூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கீழ்வேளூா் போலீஸாா் சித்ரவேல் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT