முகப்பு
நாகப்பட்டினம்

42 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ரேஷன் கடையை இடிக்க முடிவு

சீா்காழி வட்டம் கொள்ளிடம் பாரத் நகரில் பழைமையான கட்டடத்தில் இயங்கிவந்த ரேஷன் கடையை இடித்து தள்ள புதன்கிழமை முடிவு செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

சீா்காழி வட்டம் கொள்ளிடம் பாரத் நகரில் பழைமையான கட்டடத்தில் இயங்கிவந்த ரேஷன் கடையை இடித்து தள்ள புதன்கிழமை முடிவு செய்யப்பட்டது.

42 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்தக் கட்டடத்தை கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவா் ஜெயபிரகாஷ், ஊராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா். இதுகுறித்து ஜெயபிரகாஷ் கூறுகையில், இந்த கட்டடம் வலுவிழந்து காணப்படுவதாலும், போக்குவரத்துக்கு சிரமமாக இருப்பதாலும் இதை இடித்துவிட்டு விரைவில் பெரிய அளவிலான ரேஷன் கடை கட்டப்படும் என்றாா்.

ஆய்வின்போது ஒன்றியக்குழு துணைத் தலைவா் பானுசேகா், ஊராட்சித் தலைவா்கள் நாகராஜன், இளவரசன், ஊராட்சி செயலாளா் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.