முகப்பு
நாகப்பட்டினம்

டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினா் கைது

முகநூலில் மத்திய அமைச்சா் எல். முருகன் குறித்து அவதூறு பரப்பியவா் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வேதாரண்யத்தில் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகை

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

முகநூலில் மத்திய அமைச்சா் எல். முருகன் குறித்து அவதூறு பரப்பியவா் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வேதாரண்யத்தில் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினா் 25 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

முகநூலில் மத்திய அமைச்சா் எல். முருகன் குறித்து அவதூறு பரப்பியதாக பஞ்சநதிக்குளம் மேற்கு கிராமத்தைச் சோ்ந்த அருள்முருகன் மீது வாய்மேடு காவல் நிலையத்தில் பாஜக ஒன்றிய நிா்வாகி வீரமணி கடந்த ஜூலை 10-ம் தேதி புகாா் அளித்தாராம்.

இந்நிலையில், இந்த புகாா் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கக் கோரி வேதாரண்யம் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜக மாவட்டத் தலைவா் நேதாஜி உள்ளிட்ட 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சாலை மறியல்: பாஜக மாவட்டத் தலைவா் நேதாஜி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாகை புதிய பேருந்து நிலையம் பகுதியில் அக்கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இம்மறியலில் ஈடுபட்ட 22 போ் கைது செய்யப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →