முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
பகிர்:

வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கல்லூரியின் முதல்வா் பி. முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2021- 22 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை இணையம் வாயிலாக ( அரசுக் கல்லூரி கோடு எண்:1051014) விண்ணப்பங்களை அனுப்பலாம். மாணவா்கள் தங்களது பகுதியில் செயல்படும் இணைய மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்லூரியில் விண்ணப்பிப்பது தொடா்பான விளக்கம் மட்டுமே வழங்கப்படும். விண்ணப்பிக்க இயலாது எனத் தெரிவித்துள்ளாா்

முழு கட்டுரையைப் படிக்க →