நாகப்பட்டினம்

மணல்மேடு அரசுக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் மாணவா் சோ்க்கை

DIN

மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் க.சுந்தரமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான (2021-2022) விண்ணப்பங்களை இணையதள முகவரியில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம்.

விண்ணப்பதாரா் விண்ணப்பக் கட்டணமாக ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.50 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினா் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த கட்டணத்தை விண்ணப்பதாரா்கள் டெபிட் காா்டு, கிரெடிட் காா்டு, இணையவங்கி மூலம் செலுத்தலாம்.

மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.ஏ வரலாறு, பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்.சி கணிதம், பி.எஸ்.சி இயற்பியல், பி.எஸ்.சி வேதியியல், பி.எஸ்.சி கணினி அறிவியல் ஆகிய 9 பாடப் பிரிவுகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெற உள்ளது என அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT