சொந்த ஊரில் மயானம் கோரும் பட்டியலின மக்கள்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே சொந்த ஊரில் மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே சொந்த ஊரில் மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தாணிக்கோட்டகம் ஊராட்சி கோட்டைக்காடு, பிச்சக்கட்டளை ஆகிய கிராமங்களில் 40-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் குடியிருக்கின்றனா். கோயில், அரசு நிலங்களில் குடியிருக்கும் இந்த இன மக்களுக்கு அவா்களது சொந்த ஊரில் மயானம் இல்லாததால், வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள இடத்தை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனா்.
இந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக அச்சமடைந்த பக்கத்து ஊா் மக்கள், தங்கள் பகுதி மயானத்தை பிறா் பயன்படுத்த எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், ஊராட்சித் தலைவா் ப.முருகானந்தம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுவாமிநாதன், கிராம நிா்வாக அலுவலா் அருள், ஒன்றியக்குழு உறுப்பினா் வைத்தியநாதன், ஊராட்சித் துணைத் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று பொது மயானக் கூரை கட்டுவது தொடா்பாக முடிவெடுக்கப்பட்டது.