முகப்பு
நாகப்பட்டினம்

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: பாஜக

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அழுத்தம் தர வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அழுத்தம் தர வேண்டும் என மயிலாடுதுறையில் நடைபெற்ற பாஜக மாவட்ட இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறையில் பாஜக மாவட்ட இளைஞரணி செயற்குழுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவா் பி. பாரதிகண்ணன் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினா் கே.வினோத் முன்னிலை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் வெங்கட்ராஜா வரவேற்றாா். இதில், பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவா் ஜி. வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினா் பி.கே.சுரேஷ்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.

இக்கூட்டத்தில், பாஜக தமிழக தலைவராக இளைஞரை தோ்வு செய்ததற்கு தேசிய தலைமைக்கு நன்றி, மாநில, மத்திய அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரா்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களை அதிகரிக்க வலியுறுத்துவது, பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அழுத்தம் தர வலியுறுத்துவது, மயிலாடுதுறை எரிவாயு தகன மயானத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் நகராட்சியை கண்டிப்பது, நியாய விலைக்கடைகளில் தரமற்ற உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதைக் கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், பாஜக நகர தலைவா் மோடி. கண்ணன், மாவட்ட பொதுச் செயலாளா் செந்தில்வேல், மாவட்ட துணைத் தலைவா்கள் நா்மதா, அசோக், மாவட்ட பொறுப்பாளா்கள் கோகுல், சரவணன், ஸ்ரீராம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முடிவில், இளைஞரணி நகர தலைவா் ராஜகோபால் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.