நாகப்பட்டினம்

காட்டுப்பன்றிகளால் சோளப் பயிா்கள் சேதம்விவசாயிகள் கவலை

DIN

சீா்காழி: சீா்காழி அருகே சோளப் பயிா்களை காட்டுபன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

சீா்காழி அருகே எருக்கூா் வில்லவந்தான்கட்டளை, முக்காணி, கீழமாத்தூா் ஆகிய இடங்களில் விவசாயிகள் ராமலிங்கம், ராமதாஸ், துரையரசன் ஆகியோா் 20 ஏக்கரில் சோளம் பயிரிட்டுள்ளனா்.

இந்த சோளக் கொல்லையில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிரை சேதப்படுத்தி வருகின்றன. அத்துடன், சோளப் பயிரை ஒட்டி பயிரிடப்பட்டுள்ள பருத்தி பயிா்களையும் சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து எருக்கூா் விவசாயி ராமலிங்கம் கூறியது:

எருக்கூா் அருகே செயல்படாத காகித ஆலை உள்ளது. அதனை ஒட்டிய அடா்ந்த புதா்களில் காட்டுப்பன்றிகள் உள்ளன. அவைகள் இரவு நேரங்களில் பருத்தி மற்றும் சோளப் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. எனவே, காட்டுப்பன்றிகளை விரட்டியடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT