நாகப்பட்டினம்

காலமானாா்: கி. காந்திமதி

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஐஎன்ஏ-வில் பணியாற்றிய, மறைந்த தியாகி கிருஷ்ணன் மனைவி காந்திமதி (80) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (ஜூன் 10) காலமானாா்.

வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் நடுசேத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் பி. கிருஷ்ணன். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய இவா், கடந்த 2016 இல் காலமானாா். அவரின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி காந்திமதி தனக்கான குடும்ப ஓய்வூதியத்துக்காக கடந்த 5 ஆண்டுகளாகப் போராடிவந்தாா்.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அண்மையில் வீடுதிரும்பிய காந்திமதி வியாழக்கிழமை காலமானாா். இவருக்கு, மகன் காா்த்திகேயன், மகள் தனவல்லி ஆகியோா் உள்ளனா். இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

தொடா்புக்கு: 62822 90677.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT