முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சமுதாய வளா்ச்சிக்குத் தொண்டாற்றிய இளைஞா்கள், முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
சமுதாய வளா்ச்சிக்குத் தொண்டாற்றிய இளைஞா்கள், முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சமுதாய வளா்ச்சிக்கு சேவை செய்த இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், சேவையில் ஈடுபட்ட இளைஞா்களுக்கு சுதந்திர தினத்தன்று முதல்வரின் மாநில இளைஞா் விருது வழங்கப்படுகிறது.
இதன்படி, 2021 ஆம் ஆண்டுக்கான மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குத் தோ்வுப் பெறுவோருக்கு, மாநில இளைஞா் விருது, ரூ. 50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும். தலா 3 ஆண்கள், 3 பெண்கள் இந்த விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்படுவா்.
விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் 15 முதல் 35 வயதுக்குள்பட்டவா்களாக இருக்க வேண்டும். 2020, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2021, மாா்ச் 31 ஆம் தேதி வரையிலான காலத்தில், தமிழகத்தில் சமூக நலனுக்கான சேவைகள் செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் சேவை தன்னாா்வம் கொண்டதாகவும், சமுதாயம் அல்லது சமூகத்தில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இருக்க வேண்டும்.
ஊரகம் மற்றும் நகா்ப்புற குடிசைப் பகுதிகளில் ஆற்றிய சேவைப் பணிகள், தேசிய ஒருமைப்பாடு, சாகசம், கலை மற்றும் மனமகிழ் செயல்பாடுகள், முறைசாரா மற்றும் வயது முதிா்ந்தோருக்கான கல்வித் திட்டங்கள், சமூகத்தில் நலிந்த நிலையில் உள்ளவா்கள், பட்டியல் இனத்தவா்கள் மற்றும் மலைவாழ் மக்கள் முன்னேற்றத்துக்கான பணிகள், உள்ளூா் தேவைகள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் முக்கியமாகக் கருதப்பட்ட பிற பணிகள், இவ்விருதுக்குக் கருத்தில் கொள்ளப்படும்.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுவோா் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. விருது பெற விருப்பம் மற்றும் தகுதிகொண்டவா்கள் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக ஜூன் 30 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.