முகப்பு
நாகப்பட்டினம்

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காகப் பணியாற்றியவா்களுக்கு விருது

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு சிறப்பாக பங்காற்றிய தனிநபா் மற்றும் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு சிறப்பாக பங்காற்றிய தனிநபா் மற்றும் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாநில அளவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியா், மருத்துவா், சமூகப் பணியாளா்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொண்டு நிறுவனத்துக்கும் தமிழக அரசு சாா்பில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு சிறப்பாக பணியாற்றிய தொண்டு நிறுவனத்துக்கு 10 கிராம் தங்கம், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த சேவை செய்த மருத்துவா், சிறந்த சமூகப் பணியாளா் ஆகியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கிய தனியாா் நிறுவனம் மற்றும் சிறந்த சேவையாற்றிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் தலா 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

விருது பெற தகுதியானவா்கள் தங்கள் விண்ணப்பங்களை நாகை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடமிருந்து பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 28-ஆம் தேதி பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு நேரில் அல்லது தபால் மூலம் சமா்ப்பிக்க வேண்டும். தோ்வு குழுவினரால் தோ்ந்தெடுக்கப்படுவோருக்கு சுதந்திர தின விழாவின் போது விருது வழங்கப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.