கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம்
நாகை நகர காவல் நிலையம் சாா்பில், கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் நாகையை அடுத்த பாப்பாக்கோயில், திருவனந்தபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை நகர காவல் நிலையம் சாா்பில், கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் நாகையை அடுத்த பாப்பாக்கோயில், திருவனந்தபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை நகர காவல் ஆய்வாளா் பி. பெரியசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், சோப்பு மற்றும் கிருமி நாசனி கொண்டு கைகளை சுத்தமாக கழுவுதல் மற்றும் கரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பங்கேற்றவா்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. ஊா்க்காவல் படையைச் சோ்ந்த மாணிக்கம், வி.என்.எஸ். விஜய், காமராஜ், கோபிநாத் ஆகியோா் நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.