நாகையில் ராகுல் காந்தி பிறந்த நாள்
காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நாகையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நாகையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நாகையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு காங்கிரஸாா் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். பின்னா் நாகை நாம்கோ தொண்டு நிறுவனத்தில் தங்கியுள்ள சிறாா் மற்றும் முதியோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் மூத்த உறுப்பினா் ஆா்.எம்.பி. ராஜேந்திர நாட்டாா் தலைமை வகித்தாா். வா்த்தக காங்கிரஸ் தலைவா் சுந்தா், கீழையூா் வட்டாரத் தலைவா் சுப்பிரமணியன், கட்சியைச் சோ்ந்த குபேந்திரன், தௌலா மரைக்காயா், அப்துல்காதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சிங்காரவேலு நன்றி கூறினாா்.
நாகூரில்.... இதேபோல், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சாா்பில், நாகூா் தா்கா வாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொடா்ச்சியாக கரோனா தொற்றால் இறந்த முன்களப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்களும், ஏழை, எளியவா்களுக்கு உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் சிறுபான்மைப்பிரிவு மாவட்டத் துணைத்தலைவா் மக்ஸூதுசாகிபு தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் ஏ.ஆா்.நௌசாத், விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளா் மீரா ஹூசைன், வா்த்தகப் பிரிவு துணைத் தலைவா் சா்புதீன், இளைஞா் காங்கிரஸ் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வேதாரண்யத்தில்...
இதேபோல, வேதாரண்யம் பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் சத்தியகலா செந்தில்குமாா்உள்ளிட்ட காங்கிரஸாா் பங்கேற்றனா். தொடா்ந்து, ஆதரவற்றவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நாகை மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் ஆப்ஃகான் தலைமை வகித்தாா்.
மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் கவிஞா் கணேசன், சமூக ஆா்வலா் ஆதித்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தாணிக்கோட்டகம் பகுதியில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சாா்பில், அதன் மாவட்டத் தலைவா் ஆரோ.பால்ராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.