முகப்பு
நாகப்பட்டினம்

பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி அருகேயுள்ள ஆக்கூா் கடைவீதியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

தரங்கம்பாடி அருகேயுள்ள ஆக்கூா் கடைவீதியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் ஒன்றியத் தலைவா் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளா்சிங்காரவேலன், மாவட்ட தலைவா் அறிவழகன், ஒன்றிய செயலாளா் அனீஷ் ரஹ்மான், பொருளாளா் சபீா், துணைத் தலைவா் இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தின்போது, பனைங்காய் வண்டி மற்றும் நடை வண்டிகளை ஓட்டி மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.