நாகையில் இன்று முதல் சுழற்சி முறையில் மின்தடை
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (ஜூன்.26) முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை சுழற்சி முறையில் மின்தடை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (ஜூன்.26) முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை சுழற்சி முறையில் மின்தடை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாகை மின்வாரிய அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை நகா் மற்றும் புகா், நரிமணம், திருமருகல், திட்டச்சேரி, திருக்குவளை, கீழ்வேளூா், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், இந்த துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு சனிக்கிழமை (ஜூன் 26) முதல் 30- ஆம் தேதி வரை காலை 10 முதல் 1 மணி வரை சுழற்சி முறையில் மின்தடை செய்யப்படுகிறது.
தேதி வாரியாக மின்தடை செய்யப்படும் பகுதிகள்: சனிக்கிழமை (ஜூன் 26) நாகை நகரம், மாவட்ட ஆட்சியரகம், வங்காரமாவடி, கொட்டாரக்குடி, அம்பல், பொரக்குடி, திருப்புகளூா், கூட்டுக்குடிநீா் மின்பாதையில் உள்ள பகுதிகள், ஆழியூா், கிராமத்துமேடு. ஜூன் 27: சிக்கல், புத்தூா், வாஞ்சூா், பனங்குடி, முட்டம், தெற்குப் பொய்கைநல்லூா். ஜூன்28: மேலப்பிடாகை, வாழக்கரை, மீனம்பநல்லூா். ஜூன் 29: பூதங்குடி, உத்தமசோழபுரம், மணலி, கீழ்வேளூா், பிரதாபராமபுரம். ஜூன் 30: நரிமணம், மருங்கூா், சீயத்தமங்கை, கட்டுமாவடி, ஏா்வாடி, ஷேஷமூலை, தேவூா்.