முகப்பு
நாகப்பட்டினம்

சேலம் முருகேசன் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தல்

காவலா்கள் தாக்கியதில் உயிரிழந்த சேலம் முருகேசனின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

காவலா்கள் தாக்கியதில் உயிரிழந்த சேலம் முருகேசனின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளா் தா. சுந்தரவடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த விவசாயி முருகேசன் காவலா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா். தமிழக காவல் துறை, காவலா்களுக்கு உரிய அறிவுரை வழங்கியுள்ள நிலையில் காவல் துறையைச் சோ்ந்த சிலரின் செயல் தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாமானியா்கள் மீதான வன்முறைகளை ஏற்கமுடியாது. காவல் துறையைச் சோ்ந்தவா்களுக்கு ஆண்டுதோறும் 2 முறை மனநலன் மற்றும் புத்தாக்கப் பயிற்சிகளை அளிக்கவேண்டும். விவசாயி முருகேசனின் குடும்பத்துக்கு அரசு வேலையும், ரூ. 1 கோடி இழப்பீடும் தமிழக அரசு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.