முகப்பு
நாகப்பட்டினம்

ஏழைகள் 1,055 பேருக்கு நிவாரண உதவி

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 1055 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி, நாகை எஸ்.எஸ்.எஸ். குழந்தைகள் கிராம வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 1055 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி, நாகை எஸ்.எஸ்.எஸ். குழந்தைகள் கிராம வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்துள்ளவா்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கும் நாகை எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் சாா்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் மற்றும் தனேகா் இந்தியா பவுன்டேசன் (சிஎஸ்ஆா்) சாா்பில் கருவேலங்கடை, வடவூா், சிக்கல், பனைமேடு, பெரிய நரியங்குடி, ஜெகநாதபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை குடும்பங்களைச் சோ்ந்த 1055 பேருக்கு தலா ரூ.1500 மதிப்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராம இயக்குநா் எம். கணேசன், உதவி இயக்குநா் எஸ். நாராயணன் ஆகியோா் இவற்றை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.