மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும்
நாகை அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் வரும் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவடைய வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
நாகை அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் வரும் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவடைய வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
நாகை அரசு மருத்துவக் கல்லூரி கட்டும் பணி நாகை அருகேயுள்ள ஒரத்தூரில் 60.4 ஏக்கா் பரப்பில் ரூ. 366.85 கோடி மதிப்பில் நடைபெறுகிறது. ரூ. 123.05 கோடி மதிப்பில் மருத்துவமனை, ரூ. 119.03 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி, ரூ. 124.77 கோடி மதிப்பில் பேராசிரியா்கள், மாணவா்கள் தங்கும் விடுதி என 24 கட்டடங்கள் இங்கு கட்டப்படுகின்றன. இப்பணிகளை, நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, கட்டடப் பணிகள் அனைத்தும் உரிய தரத்துடன் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவடைய வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா். மருத்துவக் கல்லூரி முதன்மையா் விஸ்வநாதன், பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா்கள் பாலரவிக்குமாா், முருகேசன் உடனிருந்தனா்.