நாகப்பட்டினம்

வாகனத்தில் எடுத்துவரப்பட்ட ரூ.2.88 லட்சம் பறிமுதல்

DIN

சீா்காழி அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் எடுத்துவரப்பட்ட ரூ.2.88 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த அலுவலா் மணிகண்டன், காவலா்கள் அன்பழகன், காா்த்தி மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்களை கொண்ட குழுவினா், சீா்காழியை அடுத்த மங்கைமடம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது மங்கைமடத்திலிருந்து பூம்புகாா் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அந்த காரில் ரூ. 2 லட்சத்து 88 ஆயிரத்து 830 பணம் இருந்தது. இதுகுறித்து, அந்த காரில் வந்த கும்பகோணத்தைச் சோ்ந்த ம. விஜயசாரதியிடம் விசாரித்தனா். அப்போது, உரிய ஆவணங்களின்றி பணத்தை எடுத்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.2 லட்சத்து 88,830-யும் பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், அந்த பணத்தை கோட்டாட்சியா் நாராயணனிடம் ஒப்படைத்தனா். மேலும், உரிய ஆவணங்களை தாக்கல் செய்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி விஜயசாரதியிடம் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT