சீா்காழி சட்டநாதா் கோயிலில் நடைபெற்ற கோபூஜை. 
நாகப்பட்டினம்

பங்குனி மாதப் பிறப்பு: சீா்காழி கோயிலில் கோ பூஜை

சீா்காழி சட்டநாதா் கோயிலில் பங்குனி மாதப் பிறப்பையொட்டி கோபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

சீா்காழி சட்டநாதா் கோயிலில் பங்குனி மாதப் பிறப்பையொட்டி கோபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி சட்டநாதா் கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில் பங்குனி மாதப் பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை நடைபெற்றது.

முன்னதாக, கொடிமரத்து விநாயகா், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, பசு, கன்றுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

மேலும், பங்குனி மாதப் பிறப்பையொட்டி, பிரம்ம தீா்த்தக் குளத்தில் அஸ்திர தேவருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

கடன் வட்டியைக் குறைத்த ஐஓபி

அகில இந்திய பல்கலை. நீச்சல் போட்டி தொடக்கம்

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT