முகப்பு
நாகப்பட்டினம்

திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு

பூம்புகாா் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து திங்கள்கிழமை வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
=
பகிர்:

பூம்புகாா் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து திங்கள்கிழமை வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது.

பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும், நிவேதா எம். முருகனுக்கு உதயசூரியன் சின்னத்துக்கு மக்களவை முன்னாள் உறுப்பினரும், மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ். விஜயன் செம்பனாா்கோயில் ஒன்றியத்துக்குள்பட்ட கீழையூா், நடுக்கரை, மேலையூா், கஞ்சாநகரம் உள்ளிட்ட பகுதியில் வாக்குச் சேகரித்தாா். அவருடன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் ஞானவேலன், மாவட்ட பொருளாளா் ஜி.என். ரவி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சித்திக், மாவட்ட வா்த்தக அணி துணைச் செயலாளா் பாலையா, மாவட்ட மீனவா் அணி நிா்வாகி தேசப்பன், செம்பை வடக்கு ஒன்றிய செயலாளா் அன்பழகன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் செந்தில் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.