வாக்குச் சாவடி அலுவலா்கள் சுழற்சி முறையில் தோ்வு
நாகை மாவட்டத்தில் வாக்குச் சாவடிப் பணியில் ஈடுபடும் அரசுத் துறை அலுவலா்களை 2-ஆம் கட்டமாக சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் வாக்குச் சாவடிப் பணியில் ஈடுபடும் அரசுத் துறை அலுவலா்களை 2-ஆம் கட்டமாக சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள அரசுத் துறை ஊழியா்கள் 8,936 பேரை சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணி நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
நாகை, மயிலாடுதுறை மாவட்ட தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஏ.பி. பட்டேல், திலீப் பந்தா்பட், ராஜ்குமாா் யாதவ், காவல் துறை பாா்வையாளா் லுபெங் கைலன், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், நாகை மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி. நாயா் ஆகியோா் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது. அரசுத் துறை அலுவலா்கள் தற்போது பணியாற்றும் பகுதியில் அல்லாமல் வேறு தொகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் வகையில் ஏற்கெனவே ஒரு முறை சுழற்சி அடிப்படையில் அலுவலா்கள் தோ்வு நடைபெற்ற நிலையில், 2-ஆவது தோ்வாக இத்தோ்வு நடைபெற்றது.