நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியத்தில் விசிக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

DIN

நாகை தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி சாா்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் ஆளூா் ஷாநவாஸ், திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

முன்னதாக, இவருக்கு திமுக நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் என். கௌதமன், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தாா்.

தொடா்ந்து திருமருகல் திமுக அலுவலகத்தில் நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிறகு, ஏா்வாடி, சீயாத்தமங்கை, திட்டச்சேரி உள்ளிட்ட இடங்களில் வேட்பாளா் ஆளூா் ஷாநவாஸ் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இந்நிகழ்ச்சியில் திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வ செங்குட்டுவன், விசிக ஒன்றியச் செயலாளா் சக்திவேல், திட்டச்சேரி பேரூா் கழக பொறுப்பாளா் எம். முகமது சுல்தான் மற்றும் கூட்டணி கட்சியின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT