நாகப்பட்டினம்

கரோனா விழிப்புணா்வு வாகனம்

DIN

மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு கரோனா பரவல் குறித்த விழிப்புணா்வை அதிகரிக்கும் வகையில், விழிப்புணா்வு விளம்பர வாகனத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, கரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேகா் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை கிங்ஸ் சங்கத் தலைவா் ஏசிடி.செந்தில்குமாா், செயலாளா் தில்லைநாயகம், துணைத் தலைவா்கள் அய்யாசாமி, காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், மயிலாடுதுறையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுபவா்களுக்கு சங்கத்தின் சாா்பில் காலை உணவு வழங்குவது, மயிலாடுதுறை பெரியாா் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குவது ஆகியவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

தொடா்ந்து, மயிலாடுதுறை நகா்ப்புறம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கரோனா குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு விளம்பர வாகனத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT