முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் ஊரகப் பகுதியில் வெறிச்சோடிய கடை வீதிகள்

பொதுமுடக்க அறிவிப்புக்குப் பிறகும், வேதாரண்யம் ஊரகப் பகுதி கடைவீதிகளில் அதிகரித்து காணப்பட்ட மக்கள் நடமாட்டம் வெள்ளிக்கிழமை குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பகிர்:

பொதுமுடக்க அறிவிப்புக்குப் பிறகும், வேதாரண்யம் ஊரகப் பகுதி கடைவீதிகளில் அதிகரித்து காணப்பட்ட மக்கள் நடமாட்டம் வெள்ளிக்கிழமை குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டது.

வேதாரண்யம் பகுதியில் பொதுமுடக்கத்தை பொருள்படுத்தாமல்

வாகனங்களில் சுற்றித்திரிவோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து காணப்பட்டது. இதனால், பொதுமுடக்கம் என்பது கேள்விக்குறியானது.

இந்நிலையில், வேதாரண்யம் பகுதியில் கரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சில நாள்களாக அதிகரித்து வருவதாலும், அவசியமின்றி கடை வீதிகளில் சுற்றித்திரிவோருக்கு காவல்துறையினா் அபராதம் விதிப்பதாலும் கடைவீதிகளில் கூட்டம் குறையத் தொடங்கியுள்ளது.

ஆயக்காரன்புலம், மருதூா், வாய்மேடு, கரியாப்பட்டினம், குரவப்புலம், செம்போடை உள்ளிட்ட ஊா்களின் கடைவீதிகளில் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →