வேதாரண்யத்தில் 2-வது நாளாக பலத்த கடற்காற்று
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 2-வது நாளாக சனிக்கிழமையும் பலத்த கடல்காற்று வீசியது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 2-வது நாளாக சனிக்கிழமையும் பலத்த கடல்காற்று வீசியது.
வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலோரப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி, பலத்த கடல்காற்று தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து வீசி வருகிறது.
இந்நிலையில், 2-வது நாளாக சனிக்கிழமையும் காற்று மேலும் வேகமாக வீசியது. கடல் சீற்றமாக காணப்பட்டது.
அரபிக் கடல் பரப்பில் உருவாகியுள்ள புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்து இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கரோனா தொற்று காரணமாக ஏற்கெனவே மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.