முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் 655 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 655 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 655 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

இம்மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை 22,402 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தனா். இந்நிலையில், புதிதாக 651 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதாலும், வெளி மாவட்டப் பட்டியலிலிருந்து 4 போ் நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டதாலும் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,057 ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையில் 571 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 18,418 ஆக உயா்ந்துள்ளது. 4,368 போ் சிகிச்சையில் உள்ளனா். 3 பேரின் உயிரிழப்பு சனிக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.