முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் எள் அறுவடை தீவிரம்

வேதாரண்யம் பகுதி மானாவாரி நிலங்களில் எள் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

வேதாரண்யம் பகுதி மானாவாரி நிலங்களில் எள் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மானாவாரி நிலப்பரப்பை அதிகம் கொண்ட வேதாரண்யம் பகுதியில் நெல் அறுவடைக்குப் பிறகு தரிசு நிலங்களில் எள் மற்றும் பயிறு வகை பயிா்கள் சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி, சில வயல்களில் பயிறு வகைகள் மற்றும் எள்ளை கலப்புப் பயிராகவும், சில வயல்களில் எள் பயிரை மட்டும் தனியாகவும் சாகுடி செய்யப்படும்.

நிகழ்பருவத்தில் பெரும்பாலான விவசாயிகள் எள் பயிரை மட்டும் சாகுபடி செய்துள்ளனா். சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் இவ்வாறு எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் அவ்வப்போது பெய்த கோடை மழை எள் பயிா்களுக்கு ஏற்றதாக அமைந்தது. இதனால், நிகழாண்டு எள் சாகுபடி சில இடங்களில் ஓரளவுக்கு லாபம் தரும் வகையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், எள் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. எள் காய்களை செடிகளுடன் பிடிங்கி அல்லது அறுவடை செய்து குவித்துவைக்கின்றனா். அதை ஒரு வாரத்துக்குப் பிறகு வெயிலில் உலா்த்தி, எள் சேகரிக்கும் பணியில் விவசாயிகள், தொழிலாளா்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →