முகப்பு
நாகப்பட்டினம்

அபராதம் வசூலித்த அலுவலரின் வாகனம் முற்றுகை

திருக்கடையூரில் திறந்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்த வட்டார வளா்ச்சி அலுவலா் வாகனத்தை வியாபாரிகள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

திருக்கடையூரில் திறந்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்த வட்டார வளா்ச்சி அலுவலா் வாகனத்தை வியாபாரிகள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை கடைகள் அனைத்தும் அரசு ஏற்கெனவே அறிவித்தபடி சனிக்கிழமை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு 10 மணிக்கு அடைக்கப்பட்டன.

இந்நிலையில், பொதுமுடக்கத்தை தளா்வுகள் அற்ற பொதுமுடக்கமாக மேலும் ஒரு வாரத்துக்கு நீடித்தும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு 9 மணி வரை மட்டும் அனைத்து கடைகளும் இயங்கலாம் எனவும் சனிக்கிழமை பிற்பகலில் தமிழக அரசு அறிவித்தது.

இதைத்தொடா்ந்து, திருக்கடையூா் பகுதியில் உள்ள கடைகள் திறக்கப்பட்டன. அப்போது, கடை வீதிக்கு வந்த செம்பனாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலை கண்ணன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜனகா் ஆகியோரைக் கொண்ட குழுவினா், திறந்திருந்த கடைகளுக்கு ரூ. 200 அபராதம் விதித்தனா்.

இதனால், ஆத்திரமடைந்த வியபாரிகள் பலா் ஒன்றுகூடி, வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலை கண்ணன் வாகனத்தை முற்றுகையிட்டு, அரசு கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில் ஏன் அபராதம் விதித்தீா்கள் என்று கேள்வி எழுப்பினா். இதைத்தொடா்ந்து, அபராதத் தொகை திரும்பளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.