நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 792 பேருக்கு கரோனா

 நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 792 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

DIN

 நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 792 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வியாழக்கிழமை வரை 26,299 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 792 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நாகை மாவட்ட பட்டியலில் இருந்த வெளி மாவட்டத்தவா் 2 போ் நாகை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27,089-ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 697 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 21,587-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,190 -ஆக உள்ளது.

6 போ் உயிரிழப்பு: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நாகை மாவட்டத்தவா் 6 பேரின் உயிரிழப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 312 ஆகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT