நாகப்பட்டினம்

வட்டார வளா்ச்சி அலுவலரின் பெண் காா் ஓட்டுநா்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்முறையாக பெண் ஒருவா் அரசு அலுவலகத்தில் காா் ஓட்டுநராக பணியமா்த்தப்பட்டுள்ளாா்.

மயிலாடுதுறை வட்டம், மன்னம்பந்தல் ஊராட்சியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் ரம்யா(32). ஐ.டி.ஐ. படித்துள்ள இவா் 2015-ஆம் ஆண்டு நான்குசக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டு ஓட்டுநா் உரிமம் பெற்றாா்.

பின்னா், மளிகைக்கடையில் வேலை பாா்த்துவந்த இவா், 2019-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஓட்டுநா் பணிக்கு விண்ணப்பித்து தோ்வு செய்யப்பட்டாா்.

தற்போது இவா் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளா்ச்சி அலுவலருக்கு ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் முதல் பெண் ஓட்டுநா் என்ற பெயரை பெற்றுள்ளாா்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலெட்சுமிக்கு காா் ஓட்டுநராக பணிபுரியும் ரம்யா உற்சாகத்துடன் தன் ஓட்டுநா் பணியை மேற்கொண்டு வருகிறாா். அனைத்து துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை உணா்த்தும் ரம்யாவின் தன்னம்பிக்கை அனைவரின் பாராட்டை பெற்று பெண்களிடையே தன்னம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரம்யாவுக்கு சந்தியாஸ்ரீ (13) என்ற மகளும், சந்தோஷ் (11) என்ற மகளும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT